kongu pavalankatti vellala gounder

Wednesday, May 6, 2020

வேளாளர்கள் உட்பிரிவு வரலாறு

வேளாளர்கள்


வேளாளர் (Vellalar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடுகேரளா மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும். ஆறுநாட்டு வேளாளர்சோழிய வெள்ளாளர்கார்காத்த வேளாளர்கொங்கு வேளாளர்சைவ வெள்ளாளர்துளுவ வெள்ளாளர் மற்றும் இலங்கை வெள்ளாளர் ஆகிய சமூகங்கள், தங்களை ஒரு வேளாளராக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[2][3] 13 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை 600 ஆண்டுகளாக இவர்கள் தமிழ் விவசாய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களாகவும், அரசியல் அதிகாரத்திலும் இருந்தனர்.
வேளாளர்
மதங்கள்இந்து 
மொழிகள்தமிழ்
உட்பிரிவுகள் [1]
தொடர்புடைய குழுக்கள்தமிழர்








வேளாளர் விளக்கம்

வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது சேக்கிழார் என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.[5]

பட்டங்கள்

வேளாளர் இன பட்டங்கள்:
  1. பிள்ளை
  2. முதலியார் அல்லது முதலி
  3. கவுண்டர்
  4. உடையார்
  5. தேசிகர்
  6. குருக்கள்
  7. ஓதுவார்


சைவ வேளாளர்

இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

உட்பிரிவு சாதியினர்






ஆதிசைவர்கள் வேதங்களோடு ஆகமங்களையும் கற்ற பிராமணர்கள் ஆவர். வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங்களால், சிவாகம விதிப்படி வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர் பெறுவர். மகாசைவரும், ஆதிசைவரும் உபநயனமும் பெற்று வேதாகமங்களை ஓதுதலையே தொழிலாக உடைமையால், `அந்தணர்` எனவும் படுவர். ஆகவே, மகா சைவர் `மகாசைவ அந்தணர்` என்றும், ஆதி சைவர் `ஆதிசைவ அந்தணர்` என்றும் சொல்லப்படுவர். இவருள் மகாசைவ அந்தணர் சிவாகமவழி நில்லா மையால், அவருக்கு ஆசாரியாபிடேகமும், அதன்வழி வரும் ஆசிரியத் தன்மையும் இல்லை. அதனால், அவர் சைவரல்லாத பிறர்க்கே ஆசிரியராதற்கு உரியர். ஆதி சைவ அந்தணர் சிவா கமத்தையே சிறப்பாக ஓதி அவற்றின்வழி நிற்றலால், அவருக்கே அபிடேகமும், அதன்வழி ஆசிரியத் தன்மையும் பெறும் உரிமை உண்டு.[1] [2] சைவ ரைவராவார் ஆதி சைவர், மகா சைவர், அநுசைவர், அவாந்தரசைவர், பிரசவசைவர் என்போரென்றும்; அநாதி சைவனாகிய சிவனை யருச்சிக்கும் சிவவேதியர் ஆதி சைவரென்றும்; சிவ தீக்கை பெற்ற வைதிகப் பிராமணர் மகா சைவரென்றும், இங்ஙனமே சிவ தீக்கை பெற்ற ஏனையர் ஏனைய சைவப் பெயர்கட்கு உரிய ராவாரென்றும் கூறுபர். ஆதி சைவப் பெயரொன்றுமே இப்பொழுது வழக்கிலுள்ளது.[3] இவர்களை சிவாச்சாரியார்கள் ஆதி சைவர் எனப்படும் சிவமறையோர். 'சிவா சாரியார்' என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெருமானைச் சிவாகமங்களின்வழித் தம் இல்லங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவாலயங்களில் பரார்த்தமாகவும் பூசை செய்பவர்கள்.[4], குருக்கள், சிவபிராமணர் 10ஆம் நூற்றாண்டு உடையார்குடி கல்வெட்டு, [5], சிவவேதியர்[6], சிவமறையோர்[7], சித்திரமேழி பட்டர்[8], சிவதுவிஜர் என்றும் பிற பெயர்களால் கல்வெட்டுகள், இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .[9]. இவர்கள் சிவனின் ஐந்து முகங்களில் இருந்து நேரடியாகத் தோன்றியவர்கள்[10] என்று சிவாகமங்கள் புகழ்கின்றன. இவர்களில் ஐந்து கோத்திரங்கள் உண்டு





சைவ வெள்ளாளர் (Saiva Vellalar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்




கார்காத்தார் (Karkathar) எனப்படுவோர் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.
கார்காத்தார்
Karkathar.jpg
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து (சைவம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்வேளாளர்
இவர்கள் கார்காத்தார், காரைக்காட்டார், கார்காத்த வேளாளர், காரைக்காட்டு வேளாளர், காரிக்காட்டுப் பிள்ளை என்று சில பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] தமிழ்நாட்டில் இச்சாதியினர் தஞ்சாவூர்திருச்சிதிருநெல்வேலிஇராமநாதபுரம்விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

பெயர்க் காரணம்தொகு

களவேள்வி நாட்டில் வேளாளர் குடியேறி இருந்து வரும் காலத்தில் ஒரு நாள் உக்கிரபாண்டியன் என்னும் அரசன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்ற போது புட்கலா வர்த்தம் (பொன்), சங்காரித்தம் (பூ), துரோணம் (மண்), காளமுகி (கல்) என்னும் நான்கு மேகங்கள் பாண்டியன் பகுதியில் மழை பொழியாமல் மேயக் கண்டு, கோபமுற்று அவற்றை சிறையிலடைத்து விட்டான். இதனை அறிந்த இந்திரன் சேனைகளுடன், பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று பாண்டியனுக்கு முடங்கல் வரைந்தான். அதாவது, பாண்டிய நாட்டில் மாதமொரு மழை பொழிய ஏற்பாடு செய்கிறேன். மேகங்களை விடுவித்து விடவும் என எழுதினான். அதைக் கண்ட பாண்டியன், இந்திரனின் கூற்றுக்கு யார் பிணை எனக்கேட்டான். அப்போது வேளாளன் ஒருவன் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக திருவிளையாடற் செய்யுள் 57, 58 ஆகியவைகளில் அறியக் கிடைக்கிறது.
இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும். (திருவிளையாடற் செய்யுள் 57)
இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து
வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன்
எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு
விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம். (திருவிளையாடற் செய்யுள் 58)
மேற்கூறியவாறு காருக்கு (மேகத்திற்கு) பிணை கொடுத்ததால் அந்த வேளாளனுக்கு கார்காத்தான் என்ற காரணப்பெயர் வந்தது. கார்காத்தார், காராளர் என இரண்டும் காரணப் பெயர்கள். இதற்கு ஆதாரமாக கடம்புவன் புராணம், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளில் பாக்கள் உள்ளன. மேகங்களைக் கட்டி வைத்த இடம் கட்டனூர் என்றும், சிறையிடப் பெற்ற இடம் இருஞ்சிறை எனவும் வழங்கப் பெற்றது. இவ்வூர்கள் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ளது.

நாட்டுக்கோட்டை நகரத்தார் உறவுதொகு

“காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் குலத்துப் பெண்கள் யாருமே உயிரோடு இல்லாத நிலையில் இருந்தனர். நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் இரத்ன மகுட வைசியர் என்பதால் மன்னனின் முடிசூட்டு விழாவை அவர்கள்தான் நடத்தி வைக்க வேண்டும். முடி சூட்டுவதற்குத் திருமணமானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதால் உயிர் பிழைத்த ஒன்பது நகரத்து வாலிபர்களுக்கும் ஒன்பது கார்காத்த வேளாளர் குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் நகரத்தார் குலத்துப் பெண்கள் அனைவரும் கார்காத்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் ஆவர்.” என்று திருமதி தேவகி முத்தையா குறிப்பிடுகிறார்.[1]

96 கோத்திரங்கள்தொகு

கோத்திரம் என்பது ஆண் வழிவம்சாவழியை குறிப்பது ஆகும். தற்பொழுது 32 கோத்திரப்பிரிவுகளே வழக்கத்தில் உள்ளது.
  1. அன்னலுடையான்
  2. அஞ்சலுடையான்
  3. அங்கலுடையான்
  4. அங்கத்துடையான்
  5. அங்கனுடையான்
  6. அரியனிடையான்
  7. அச்சுதராயன்
  8. ஆவுடையான்
  9. ஆளுங்குடையான்
  10. ஆலச்சுக்குடையான்
  11. காளப்பாளன்
  12. களத்துடையான்
  13. கடம்புடையான்
  14. கருப்புடையான்
  15. கருவாளுடையான்
  16. காருடையான்
  17. காவலுடையான்
  18. காலிங்கராயன்
  19. காங்கயராயன்
  20. குன்றலுடையான்
  21. குளத்துடையான்
  22. குமாரக்குடையான்
  23. குலாவுடையான்
  24. குணமாலுடையான்
  25. குல்லத்திரையான்
  26. கூடலுடையான்
  27. கொழுமுடையான்
  28. கோவுடையான்
  29. கொற்றத்துடையான்
  30. கொங்கராயன்
  31. சாத்தனுடையான்
  32. சாத்துக்குடையான்
  33. சீனத்திரையன்
  34. சீனத்தராயன்
  35. சேனாதிராயன்
  36. செம்புதிரையான்
  37. சேவித்திரையன்
  38. சேவுடையான்
  39. தனவாருடையான்
  40. தாக்குடையான்
  41. திட்டத்திரையன்
  42. தீவனுடையான்
  43. தீபத்திரையன்
  44. துளாருடையான்
  45. தென்னவராயன்
  46. தென்னப்பிரியன்
  47. தென்னத்திரையன்
  48. தொழுவுடையான்
  49. நங்குடையான்
  50. நன்னருடையான்
  51. நாக்குடையான்
  52. நெப்புக்குடையான்
  53. நெடுவாலுடையான்
  54. பரிவுடையான்
  55. பளுவுடையான்
  56. பனையுடையான்
  57. பஞ்சத்திரையன்
  58. பல்லவராயன்
  59. பாலுடையான்
  60. பாக்கமுடையான்
  61. பாண்டித்திரையன்
  62. மல்லுடையான்
  63. பூதரமுடையான்
  64. பூவனுடையான்
  65. பெண்ணுமுடையான்
  66. மங்கலமுடையான்
  67. மணக்குடையான்
  68. மருங்குடையான்
  69. மழுவுடையான்
  70. மாயனுடையான்
  71. மாலுடையான்
  72. மளுவத்திரையன்
  73. மீனவராயன்
  74. முனையதிரையன்
  75. இயத்தனுடையான்
  76. உத்தரக்குடையான்
  77. உலகுடையான்
  78. இறையுடையான்
  79. எருமையுடையான்
  80. எருக்குடையான்
  81. வயலுடையான்
  82. வழுத்தாவுடையான்
  83. வங்காருடையான்
  84. வல்லவராயன்
  85. வசந்தராயன்
  86. வானாதிராயன்
  87. வில்லவராயன்
  88. விசையராயன்
  89. விழுதுடையான்
  90. விச்சுடையான்
  91. விருப்பத்திரையான்
  92. வில்லதிரையான்
  93. வேளாருடையான்
  94. வெண்சாருடையான்
  95. திட்டதுடையான்
  96. இலூயனுடையான்



சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். இவர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சைதிருவாரூர்நாகப்பட்டினம்திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.[1]
சோழியர் / சோழிய வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து

தோற்றம்

வேளிர் என்ற பண்டய தமிழ் குடியில் தோன்றிய இவர்கள் வேள், வேளிர், வேளான், வேளாளர் என பெயர் பெற்றனர். வேளாளர் எனும் சொல்லே பேச்சி வழக்கில் மருவி வெள்ளாளர் ஆனது. சோழியம் எனப்படும் சோழ நாட்டை பூர்வீகமாக கொண்டதால் சோழிய வெள்ளாளர் ஆனார்கள்.

வரலாறு

இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும் நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின் ஆட்சி காலத்திலிருந்தே மேன்மை நிலையை அடைந்திருந்தனர். சோழிய வேளாளர்கள் சோழர்களின் அமைச்சர்கள், படைத்தளபதிகள், அரசு அதிகாரிகள், ஊர் தலைவர்கள் போன்ற உயரிய பதவிகளில் இருந்து அவர்களின் ஆட்சிக்கு பெரும்பங்காற்றியதை கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் மூலம் அறிய முடிகிறது. கொடும்பாளூர் வேளிர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் கரிகாலச் சோழனின் முடிசூட்டும் கல்வெட்டுகளின் வாயிலாக இவர்கள் சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திரு. நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்ற நூலில் இவர்களைப் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது.[2]

கோத்திரம்/கிளை

சோழிய வெள்ளாளருள்
  1. கருப்புடையான்
  2. மருதூருடையான்
  3. காருடையார்
  4. குளத்துடையார்
  5. மாயனுடையார்
  6. வாங்காருடையார்
  7. தென்னயமுடையார்
  8. சாத்துக்குடையார்
  9. கூடலுடையார்
  10. ஆதிக்கமுடையார்
  11. காங்கா கோத்திமுடையார்
  12. சுரைக்குடையான்
  13. ஆணைபாக்கமுடையான்
  14. பாக்கமுடையான்
  15. கல்லூடையான்
போன்ற 64 கோத்திரங்கள் அல்லது கிளைகள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.

புலம்பெயர்வு

தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின், சோழ மண்டலமான கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] இவர்களில் சிலர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அரசு பணி மற்றும் தொழில் காரணமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[சான்று தேவை]

குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு

பிள்ளை மற்றும் வேளாளர் என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.
சோழிய வேளாளர்கள் தங்கள் குலதெய்வமாக அங்காளம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், பச்சையம்மன், காத்தாயி அம்மன், கருப்பசாமி, மதுரைவீரன், காத்தவராயன், பெரியசாமி போன்ற சிறு தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள்.[சான்று தேவை]
இவர்கள் தங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து குலதெய்வத்திற்கு ஆடு மற்றும் கோழிகளை பலி கொடுத்து படையலிட்டு வழிபடும் பழக்கம் உடையவர்கள்.



வீரகுடி வெள்ளாளர் (Veerakodi Vellalar) என்பது வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார்காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். இச்சமூகத்தினர் பட்டுக்கோட்டை பகுதில் முசுகுந்த வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெயருக்கு பின்னால் நாட்டார்உடையர்கவுண்டர்பிள்ளைமுதலியர் போன்ற பட்டங்கள் போடுகின்றனர். இவர்கள் ஆந்திர மாநிலம் காலக்கொண்டா நாலக்கொண்டா பகுதிகளில் பெயருக்கு பின்னால், ரெட்டி ராவ் என்று போடுகின்றனர்.



தேசிகர் (Desikar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும் சைவ வெள்ளாள சமூகமாகும். இவர்கள் குறிப்பாக பூசாரிகள் மற்றும் நில உரிமையாளர்களாக உள்ளனர்.
வீர சைவர் / தேசிகர் / பண்டாரம் / ஜங்கம் / யோகிஸ்வரர் / கன்னடியர் / கோவம்சம்
வகைப்பாடுசைவ சித்தாந்தம், லிங்காயத் , தமிழ் இலக்கியம்
மதங்கள்சைவ சித்தாந்தம்இந்து சமயம்
மொழிகள்தமிழ்
பரவலாக வாழும் மாநிலங்கள்தமிழ்நாடுகேரளா
பகுதிதமிழ்நாடுஇலங்கைமலேசியாசிங்கப்பூர்பர்மா
தொடர்புடைய குழுக்கள்
  • அபிசேகா
  • தேசிகர்

தோற்றம்தொகு

தேசிகர் சமூகம் சைவ மதத்தை பின்படுத்துகின்றனர். இந்த சமூகம் குறிப்பாக லிங்காயத், சைவ சித்தாந்தம் மற்றும் திருமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தேசிகர் என்ற சாதி பண்டாரம் என்ற வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது தமிழில் "முனிவர்" என்று பொருள்.[1] பண்டாரம் என்ற வார்த்தையின் பொருளுக்கு வெவ்வேறு கோட்பாடுகள் உள்ளன. பண்டாரம் என்பது அபிசேகா மற்றும் தேசிகர் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் பின்னாளில் தேசிகர் என்ற பெயரையே இச்சமூக மக்கள் பயன்படுத்தினர்.

திருமணம் மற்றும் பழக்கவழக்கங்கள்தொகு

இவர்கள் பிற சாதிகளுடன் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை. ஆனால் சிலர் வெள்ளாளர் பிள்ளை மற்றும் சைவ வெள்ளாளர் போன்ற சாதிகளுடன் திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள்.



ஆறுநாட்டு வெள்ளாளர் (Arunattu Vellalar) எனும் சாதி வெள்ளாளர்களின் உட்பிரிவுகளாகும். கடலூர் மாவட்டம்சிதம்பரம் அருகேயுள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களது முக்கிய தொழில் வேளாண்மை ஆகும்.[1]
ஆறுநாட்டு வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
ஆறுநாட்டு வெள்ளாளர் என்னும் பெயர் ஏற்படும் முன் வேளாளர்கள் அனைவரும் ஒரே இனமாக வேளாண்மை செய்து வந்தனர். நாளடைவில் ஜனத்தொகையின் காரணமாக வேளாளர்கள் மற்றும் அவரவர் உறவினர்கள் ஒன்றுகூடி தனித்தனி கூட்டமாக வாழ முடிவுசெய்தனர். அவரவர் செய்யும் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து தங்களைச் சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து கொண்டனர்.

பிரிவுகள்தொகு

  1. திருப்படையூர் நாடு
  2. பாச்சூர் குறட்டுப்பத்து நாடு
  3. கீழ் வள்ளுவப்ப நாடு
  4. மேல் வள்ளுவப்ப நாடு
  5. கரி காலி நாடு
  6. ஆமூர் நாடு
ஆகிய ஆறு நாடுகளில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் தங்களை ஆறுநாட்டு வேளாளர்கள் எனப் பெயரிட்டு அழைத்தனர். கி.பி. 1176 ஆம் வருடம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கூடி தங்கள் அனைவரையும் ஆறுநாட்டு வேளாளர்கள் என ஓர் செப்பு பட்டயம் எழுதி, தங்கள் குடும்பங்களை முப்பத்தாறு கோத்திரங்களாக வகுத்துக்கொண்டனர். கோத்திரப்பிரிவுகள் திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் சத்திரத்திலுள்ள செப்புப் பட்டயம் மூலம் அறிய முடிகிறது.

கோத்திரங்கள்தொகு

கோத்திரம் என்பது ஆண் வழிவம்சாவழியை குறிப்பது ஆகும். தற்பொழுது 32 கோத்திரப்பிரிவுகளே வழக்கத்தில் உள்ளது. அவற்றைப்பற்றி கோத்திரங்கள் பகுதியில் காணலாம். ஆறுநாட்டு வேளாளர்களாகின் ஆதி ஊர் சிதம்பரம் ஆகும். ஆறுநாட்டு வேளாளர்கள் இயற்கை சீற்றங்களின் காரணமாகச் சிதம்பரத்தை விட்டு, திருச்சி மாவட்டத்தில் 1700-1800 இடைப்பட்ட வருடங்களில் குடியேறி உள்ளனர். அமரர் ஸ்ரீ மான் வீர. கருப்பண்ணபிள்ளை, தற்போதுள்ள திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்திற்கு மனையிடத்தையும் மேற்புறமுள்ள கட்டிடங்களையும் நம்மினத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள 1891 ஆம் வருடம் இனாம்சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.[சான்று தேவை]

32 கோத்திரங்கள்தொகு

  1. ஆலத்துடையான்
  2. எதுமலுடையான்
  3. களத்துடையான்
  4. களப்பான் (வளமுடையான்)
  5. காருடையான்
  6. குணக்கொத்துடையான்
  7. குருவலுடையான்
  8. கூத்துடையான்
  9. கொன்னக்குடையான்(சேர்குடி)
  10. கோட்டுடையான்
  11. கோனுடையான்
  12. சமயமந்திரி
  13. சனமங்கலத்துடையான்
  14. சாத்துடையான்
  15. சிறுதலுடையான்
  16. திருச்சங்குடையான்
  17. தெத்தமங்கலத்துடையான்
  18. தேவங்குடையான்
  19. நத்தமுடையான்
  20. நல்லுடையான்
  21. நிம்மலுடையான்
  22. பனையடியான்
  23. பாவலுடையான்
  24. பூண்டிலுடையான்
  25. மருதுடையான்
  26. மாத்துடையான்
  27. மிரட்டுடையான் (குருவலுடையான்)
  28. முருக்கத்துடையான்
  29. வளவுடையான்
  30. வில்வராயன்
  31. வெண்ணாவலுடையான்
  32. சக்கரவர்த்தி






நன்குடி வேளாளர் எனப்படுவோர் தமிழ்நாட்டில்தூத்துக்குடிதிருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்ற சாதியினர் ஆவார். இவர்கள் இங்கு "சிவகளைப் பிள்ளைமார்" என்றும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை]

கிளைகள்தொகு

இவர்கள் பெண் வழிமுறையை கடைப் பிடிக்கிறார்கள். இவர்களின் பெண் வழி முறை எட்டு கிளைகளாக இருப்பதாக நற்குடி வேளிர் வரலாறு ஆசிரியர் திரு தி. நாராயண பிள்ளை குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]
  • கேள் அரன் கிளை
  • தென்னவன் கிளை
  • திரு அம்பலவன் கிளை
  • திருமால் கிளை
  • கன்றெறிந்தான் கிளை
  • நரசிம்மன் கிளை
  • காங்கேயன் கிளை
  • காளியார் கிளை
இந்த கிளைகளுக்கு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த உட்பிரிவுகள் "பிதிர்' என்றும் "பிருது" என்றும் அழைக்கப்படுகிறது.
இப்போது இந்த இனத்தில் இல்லாத கன்றெறிந்தான் கிளையை விட்டு விட்டால் இருப்பது ஏழு கிளைகள் உள்ளன.
இந்த ஏழு கிளைகளில் கீழே சொல்லப்பட்ட மூன்று கிளைகளுக்கு உட்பிரிவுகள் கிடையாது, காரணம் இந்தக் கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் வாரிசுதான் உள்ளன.
  • திருமால் கிளை
  • திரு அம்பலவன் கிளை
  • காங்கேயன் கிளை
மற்ற நான்கு கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். எனவே இந்த நான்கு கிளைகளுக்கும் நான்கு உட்பிரிவுகள் உண்டு.
  • கேரளன் கிளை
  • தென்னவன் கிளை
  • நரசிம்மன் கிளை
  • காளியார் கிளை
எனவே மொத்தம் 16 உட்பிரிவுகளுடன், கிளைகள் உள்ளன.






துளுவ வெள்ளாளர் (Thuluva Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளின் உள்ள ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கருநாடகம் ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
துளுவ வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெள்ளாளர் தமிழர்
தமிழ்நாடு அரசு சாதிகள் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
துளுவ வெள்ளாளர்கள் போர்வீரர்களாகவும் மற்றும் நில உரிமையாளர்களாகவும் இருந்துள்ளனர்.[1] இவர்கள் நாயக்/நாயக்கர் மற்றும் முதலி ஆகிய பெயர்களையும் பயன்படுத்துகிறார்கள்.[2][3][4]

குறிப்பிடத்தக்க நபர்கள்





கோட்டை பிள்ளைமார் என்பவர்கள் பாண்டியர்களுக்கு பட்டம் சூட்டும் பரம்பரை உரிமை கொண்டவர்கள்.

கதைதொகு

காமக்கிழத்தியின் மகனான கூத்தனுக்கு பட்டம் கட்ட மறுத்ததாலும் கூத்தன் விரும்பிய தங்கள் சாதிப்பெண்ணை தர மறுத்ததாலும் இனத்தாரோடு அக்னி குண்டத்தில்விழுந்த போது ஐந்துதலை நாகத்தால் காப்பாற்றப்பட்ட சிலரின் வழிவந்தாரே கோட்டைப் பிள்ளைமார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சாதியினர் அழிந்துவிட்டதாக கூறுகின்றனர். அவர்களை குலப்பெண்கள் தீயை தாண்டக்கூடாது என்ற பழக்கம் இருந்ததால் பாண்டியர் கோட்டை எரிந்த போதே அதிலிருந்த அனைவரும் தீயை தாண்டாமல் இறந்து விட்டதாக கூறுகின்றனர்.



----------------------

மேற்கோள்கள்

  1.  https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/vellala
  2.  Derges, Jane (2013) (in en). Ritual and Recovery in Post-Conflict Sri Lanka. Routledge. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1136214887.
  3.  Ramaswamy, Vijaya (2017). Historical Dictionary of the Tamils. Rowman & Littlefield. பக். 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-53810-686-0.
  4.  Moffatt, Michael (2015). An Untouchable Community in South India: Structure and Consensus. Princeton University Press. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-40087-036-3.
  5.  சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 1069.
  6.  Castes and tribes of south India, volume 1, page 4, https://archive.org/stream/castestribesofso01thuriala#page/4/mode/2up
  7.  http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=63094


-------------------------


கௌரிசங்கர்கவுண்டர் 
+91-98944-44451