பூவாணிய நாட்டுப்பாடல்:
வீரமிகு சோழபாண் டியுநடுவ னேரியு மேவுசித்
தூருதேவூர்
மிக்கபூ லாம்பட்டி பக்கநா டதிவலிமை
மிஞ்சுறு பெரும்பாலையாம்
பேரிலகு மிருபத்தா றூரோடு மேன்மைமொழி
பெற்றநதி களும்வரைகளும்
பேசரிய சிற்பமமர் கோயிலுங் கட்டிபுகழ்
பெருகுபூ வாணியநாடே.
தாரமங்கலம் ஓமலூர் கொங்கணாபுரம்
கச்சுளி கருப்பூர் சோழபாண்டி
காடையாம்பேட்டை நங்கைவல்லி நடுவனேரி
வனவாசி வெள்ளாறு சித்தூர்
சின்னப்பன்பட்டி மேச்சேரி தேவூர்
தோப்பூர் முப்பை-சமுத்திரம் பூலாம்பட்டி
கோனேரிப்பட்டி அரசறாமணி பக்கநாடு
இடைப்பாடி அமரகுந்தி பெரும்பாலை.
துளசம்பட்டி சூரப்பள்ளி
- ஆக ஊர்கள் - 26
பூவாணிய நாட்டின் வடக்கு எல்லையான பெரும்பாலையே
அதிகமானது இராஜமாநகரமான தடூர் (தருமபுரி) நாட்டுக்குத்
தென்எல்லை ஆம்.
மற்றொருவகை
வெண்பா
18.
*
*நங்கைவல்லி நாடு நணியபக்க நாடுடனே
தங்குபெரும் பாலையெனச் சார்நாடுந் - தங்குபுகழ்ப்
பூவா ணியநாடுட் பூத்தனவென் றோதினார்
பாவாண ருள்ளம் பரிந்து.
பூவாணிய நாட்டினுள் நங்கைவல்லி நாடு (இதை வஞ்சிநாடு என
வழங்கினதுண்டு) பக்கநாடு - (இதை வெள்ளாறு நாடு என்பாருமுளர்)
பெரும்பாலைநாடு எனச்சில ஊர்கள் சேர்ந்ததாய்ச் சிறுசிறுநாடு ஆகப்
பிளவு கொண்டும் வழங்கப்பட்டுள்ளது*.
தாரமங்கலம் கெட்டி
கொங்குப் பகுதிகளில் வாழம் தாரமங்கலம் கெட்டி மரபினரும் முதலி பட்டம் கொண்ட கொங்கு வேளாளர் ஆவர்.இவர்கள் வண்ணக்கன் கூட்டத்தையும்,நீருண்ணியர் கூட்டத்தையும் சார்ந்தவர்.தாரமங்கலத்தை அரசு புரிந்த கெட்டி முதலிகள் என்னும் அரசர்கள் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தம் பெயரு்க்கு முன்னால் நீருணி என்ற பெயரைச்சேர்த்து வழங்கியுள்ளனர்.இதனை கி.பி.1274-ஜ சேர்ந்த வீரராமனாதன் காலத்து கல்வெட்டு ஓன்று தாரமங்கலத்து முதலிகளில் நீருணி பெரிய இளமன் என்பவன் முதலாகன ஆறுவர் இளமீகரமுடைய நாயனார்க்கு தேவதானம் விட்டதையும்,
கி.பி.1281-ல் சேர்ந்த சடையவர்சந்தாபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டு ஓன்று முதலிகளில் நீருணி இளையான் நல்ல உடையப்பன் என்பவன் தனது பிதாக்கள் போரில் இலட்சுமண சதுர்வேதி மங்கலம் அமைத்ததையும் குறிப்பிடுகின்றன்.
மேலும், இளமீகரன் கோயில் காணப்படும் சுந்தர பாண்டியனின் காலத்துக் கல்வெட்டுக்களில் ஓன்று இலட்சுமண சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு உடைப் பெடுத்த காரைகளத்தினைப் பழது திருத்தி இறையிலியாகக் கொடுத்த எட்டு முதலி அரசர்களின் ஓருவராக மேற்குறிப்பிட்ட இளையான் நல்லுடையப்பனைக் குறித்துள்ளது.
இவ்வாறே, மற்றொரு கல்வெட்டு இலட்சுமணன் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்களுக்கு அமரகுந்தி முதல் வெள்ளரைப்பள்ளிஈறாக ஓன்பது ஊர்களையும் செய்ய பெருமாள் ஏரி நீர் பாயும் நான்கெல்லை நிலங்களையும் இறையிலியாக கெடுத்த ஓன்பது முதலிகளில் ஓரு வராகவும் அவரைக் குறித்துள்ளது.
நீருணியர் இன்றைய நீருண்ணியக் கூட்டமே கல்வெட்டுகளில் நீருணியர் எனப்படுகின்றனர் இக்கூட்டம் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுகள் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாகும்.
இக்கூட்டத்தைக் குறிக்கும் ஆட்பெயர்களில் வேளாளன் என்ற சாதிப்பெயருக்குப் பதில் முதலி என்ற சாதிப்பெயர் வருகிறது.எடுத்துக் காட்டாக 'முதலிகளில் நீருணி பெரிய இளமன்' .இங்கும் வேளான் என்ற சொல் காணப்படவில்லை. வேளான் என்பதும் முதலி என்பதும் அக்காலத்தில் ஓரு பொருள் கொண்டதே என்பது இதன் மூலம் அறியலாம்.
பூவாணிய நாடு:
சரபங்க நதி நீர்பிடிப்புப்பகுதி.
திருமலை நாயக்கர் காலம் வரை பூவாணிய நாடு,குன்ன வேட்டுவ பட்டக்கார் பொத்தி மன்னனால் ஆளப்பட்டு வந்தது.வேட்டுவ அப்பிச்சிமாருக்கு எதிராக போரிட்டு தோற்றவர்.அதன்பின்
திருமலை நாயக்கர் காலம் வரை பூவாணிய நாடு,குன்ன வேட்டுவ பட்டக்கார் பொத்தி மன்னனால் ஆளப்பட்டு வந்தது.வேட்டுவ அப்பிச்சிமாருக்கு எதிராக போரிட்டு தோற்றவர்.அதன்பின்
நீலன் நீருண்ணி கோத்திரத்து தாரமங்கலம் கட்டி முதலி வெள்ளாளனே பூவாணிய நாட்டார்.
பூவாணிய நாடு ஊர்த்தொகை:
சங்ககிரி தாலுகாவில் பூவாணிய நாடு:
மேட்டூர் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:
ஓமலூர் தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:
எடப்பாடி தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:
தர்மபுரி ஜில்லா - பெண்ணாகரம் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:
தர்மபுரி தாலுகா - தர்மபுரிக்குத் தெற்கும் மேற்குமுள்ள பகுதிகள் பூவாணிய நாடு:
மேட்டூர் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:
ஓமலூர் தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:
செய்திகள் சேகரித்தல் வரலாற்று மீட்புக்குழு
கௌரிசங்கர்கவுண்டர் 9894444451
பூந்துறைநாடு
No comments:
Post a Comment